ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம்
இன்று சர்வதேச யோக தினம்..! உடல் நலம் கெட்டுப் போன பிறகுதான் நாம், நம் உடல் நலத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி யோசிக்கவே செய்கிறோம். பரவாயில்லை. அதை நம்மால் முற்றிலும் சரி செய்து விட முடியும். எப்படி ? யோகாசனத்தால் தான். வேறு எந்த வழியும் கிடையாது. அலோபதியோ, ஆயுர் வேதமோ, யுனானியோ, ஹோமியோபதியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோய் முற்றிலும் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம். வாழ் நாள் முழுவதும் நோய் வராமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி யோகாசனம்தான். சிவ பெருமான் ஆடும் நடன பாவங்கள், முத்திரைகள், அசைவுகள் அனைத்தும் யோகாசனங்கள்தான். நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கைக்கும் நமக்கும் ரெம்ப தூரம். இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்லை என்பதோடு மட்டுமல்ல இயற்கையை அவமதிக்கிறோம். மருந்து, மாத்திரை, ஊசி, டானிக் என்று செலவு செய்வதோடல்லாமல் மேலும் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் சாப்பிட்டதால் வியாதிகள் வந்து துன்பப்படுபவர்களே அதிகம். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது. நம் உடலில் முக்கியமான பல குழலற்ற சதைக் கோளங்கள் உள்ளன.