ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம்

இன்று சர்வதேச யோக தினம்..!


உடல் நலம் கெட்டுப் போன பிறகுதான் நாம், நம் உடல் நலத்தின் அருமை, பெருமைகளைப் பற்றி யோசிக்கவே செய்கிறோம். 

பரவாயில்லை. அதை நம்மால் முற்றிலும் சரி செய்து விட முடியும். 

எப்படி ? 

யோகாசனத்தால் தான். 

வேறு எந்த வழியும் கிடையாது. 

அலோபதியோ, ஆயுர் வேதமோ, யுனானியோ, ஹோமியோபதியோ எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நோய் முற்றிலும் குணப்படுத்துவது என்பது இயலாத காரியம். 

வாழ் நாள் முழுவதும் நோய் வராமல் வாழ வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி யோகாசனம்தான். 

சிவ பெருமான் ஆடும் நடன பாவங்கள், முத்திரைகள், அசைவுகள் அனைத்தும் யோகாசனங்கள்தான். 

நாம் விஞ்ஞான யுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இயற்கைக்கும் நமக்கும் ரெம்ப தூரம். 

இயற்கையோடு ஒன்றி வாழ்வதில்லை என்பதோடு மட்டுமல்ல இயற்கையை அவமதிக்கிறோம். 

மருந்து, மாத்திரை, ஊசி, டானிக் என்று செலவு செய்வதோடல்லாமல் மேலும் உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்கிறோம். 

இன்றைய காலகட்டத்தில் மருந்துகள் சாப்பிட்டதால் வியாதிகள் வந்து துன்பப்படுபவர்களே அதிகம். பக்க விளைவுகள் இல்லாத மருந்தே கிடையாது.

நம் உடலில் முக்கியமான பல குழலற்ற சதைக் கோளங்கள் உள்ளன. இவற்றை சுரப்பிகள் என்றும் சொல்வார்கள். 

இவைகள் நம் நாடிகளோடு தொடர்புடையவை. இந்த நாடிகளின் முக்கிய மையங்களையே வர்ம்ப் புள்ளிகள், சக்திப் புள்ளிகள், அக்கு ப்ரஸர் புள்ளிகள் என்றெல்லாம் சொல்கிறோம். 

இவற்றில் தட்டியோ, தடவியோ, ஊசிகளால் தூண்டி விட்டோ சுரப்பிகளை நன்கு செயல்படும்படிச் செய்ய முடியும். 

அப்படிச் செய்வதால் அந்த சுரப்பிகளில் இருந்து உற்பத்தியாகும் ஹார்மோன்களின் அளவு அதிகரித்து அவை நம் இரத்தத்தில் உள்ள நோய்க் கிருமிகளைக் கொன்று விடுகிறது. 

அதே போலவே சக்தி மையங்களுக்கு அழுத்தம் கொடுத்து இந்த சுரப்பிகளை நன்கு இயங்கும்படிக்குத் தூண்டும் அழுத்தப் பயிற்சியே யோகாசனம். 

இது சாதாரணமான உடற்பயிற்சியல்ல. இந்த சுரப்பிகள் நன்கு வேலை செய்யும் மனிதனுக்கு எந்த நோயும் வராது.

பிட்யூட்டரி, பீனியல்பாடி என்ற இரு சுரப்பிகளும் சிரசின் பின்புறம் உள்ளது. 

தைராய்டு, பாரா தைராய்டு என்ற இரு சுரப்பிகளும் கழுத்துப் பகுதியில் உள்ளது. தைமாஸ் சுரப்பி மார்புப் பகுதியிலும், அட்டேரினல் சுரப்பி குண்டிக்காயின் மேல் பகுதியிலும், ஈரல் வலப்புறமும் உள்ளது. பாங்கிரியாஸ் தீனிப் பையின் கீழ் உள்ளது. 

இன்னும் பல் வேறு சுரப்பிகள் நம் உடலில் உள்ளன. இந்த சுரப்பிகள் ஒழுங்காகச் சுரப்பு நீரைச் சுரந்தால் மனிதனுக்கு எந்த வியாதியும் வராது. 

யோகாசனம் என்ற அழுத்தப் பயிற்சியின் மூலம் நாடி, நரம்புகளைத் தூண்டி விடுவதால் இந்த சுரப்பிகளை நன்கு செயல்பட வைத்திடலாம்.

சிரசாசனம், சர்வாங்காசனம் செய்வதால் பிட்யூட்டரி, பீனியல்பாடி சுரப்பிகள் நன்கு வேலை செய்யும். சர்வாங்காசனம், ஹலாசனம், மத்சியாசனம் செய்வதால் தைராயிடு, பாராதைராயிடு சுரப்பிகள் நன்கு வேலை செய்கிறது. பாத ஹஸ்தாசனம், ஹலாசனம், நௌலி, உட்டியாணா, சிவலிங்காசனம், பச்சிமோத்தாசனம் போன்ற ஆசனங்களைச் செய்வதால் பாங்கிரியாஸ் சுரப்பி நன்கு செயல்படுகிறது. 

சக்கராசனம், கோமுகாசனம், ஹலாசனம், பச்சிமோத்தாசனம், சர்வாங்காசனம், ஊர்த்துவ பத்மாசனம் செய்வதால் அட்டேரினல் மற்றும் ஈரல் நன்கு வேலை செய்கிறது. 

மேலும் நாடிகள் நன்கு அழுத்தம் பெறுவதாலும், பிராணவாயு சீராகத் தடையின்றி கிடைப்பதாலும், சக்கரங்கள் நன்கு செயல்படுவதாலும் பிராண மற்றும் ப்ரபஞ்ச ஆற்றலின் திணிவு உடலில் உண்டாகி விடுகிறது. எனவே நோய் நொடி இல்லாமல் போவதோடு இளமையாகவும், ஆயுளோடும் வாழலாம்.

எந்த வைத்திய சாஸ்திரத்தாலும் முடியாத ஒரு அதிசயம் என்னெவன்றால், யோகாசனம் மற்றும் பிராணாயாமம் மூலம் ஆணோ, பெண்ணோ நினைத்த குழந்தையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது திருமூலர் வாக்கு.

"அஞ்சனம் போன்றுடல் ஐஅறும் அந்தியில்
வஞ்சக வாதம் அறும் மத்தியானத்தில்
செஞ்சிறு காலையில் செய்திடில் பித்தனும்
சஞ்சறச் சொன்னோம் நரை திரை நாசமே"
என்கிறார் திருமூலர்.

மைபோன்ற உடலில் ஏற்படும் கப நோய் மாலையில் யோகாசனம், பிராணாயாமம் செய்தால் போகுமென்றும், நடுப்பகலில் செய்தால் வஞ்சகமான வாதம் போகுமென்றும், அதிகாலை செய்தால் பித்தம் நீங்குமென்றும், இவை எல்லாவற்றிற்கும் மேலாக நரை, திரை, மூப்பு நீங்கி என்றும் இளமையோடு சிரஞ்சீவியாக வாழலாம் என்று திருமூலர் குறிப்பிடுகின்றார்.

நாம் யார்யாருக்காகவோ உயிர் வாழ்கிறோம். நம் வாழ்வின் குறிக்கோளை அடையும் வரை உயிர் வாழ வேண்டாமா ? 

அப்படி வாழும் வரை ஆரோக்யமாக வாழ வேண்டாமா ?

எனவே அதற்காகச் சிவன் அருளிய 84000 ஆசனங்களை நம் சித்தர்கள் 1000 ஒன்று வீதம் சுருக்கி 84ஆக தந்துள்ளதாகச் சொல்வார்கள்.

எனவே நாம் யோகாசனம் பயிற்சி செய்வதோடு நம் குழந்தைகளுக்கும் கட்டாயமாக இதைச் சொல்லிக் கொடுத்தோமானால், அவர்கள் ஆயுள் ஆரோக்யமாக வாழ்வதோடு நம் தேசத்தையும் சுபீட்சமடையச் செய்திடுவார்கள்.

மேலும் யோக சாதனை செய்பவர்களுக்கு யோகாசனம் உயிரையும் உள்ளத்தையும் இணைக்கும் கருவியாகச் செயல்படுகிறது.

இன்று சர்வதேச யோக தினம்..!

ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்..!

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்