2025ல் உலகை ஆளப்போகும் 14 தொழில்கள்
உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தொழில் துறைகள் உள்ளன. சில தொழில் எந்த காலத்திலும் நிலைத்தன்மை கொண்டதாக இருக்கும். சில தொழில்கள் காலத்துக்கு ஏற்றவையாக இருக்கும். இதனை மனதில் கொண்டே புதிய தொழிலைத் தொடங்க களத்தில் இறங்க வேண்டும்.
அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் உலகை ஆளப்போகிற, உலகின் கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிற தொழிற்துறைகள் என்ன? என்பது குறித்து 'வேர்ல்டு எக்னாமிக்' இதழ் கட்டுரை வெளியிட்டுள்ளது.
அவற்றைப் பார்ப்போம்...
2025ல் உலகை ஆளப்போகும் 14 தொழில்கள்!
1. இ - காமர்ஸ் (இணையவழி வணிகம்) :
மின் வணிகம் அல்லது இணைய வணிகம் எனப்படுவது மின்னிய ஒருங்கியங்கள், இணையம். அல்லது கணினிப் பிணையங்கள் ஊடான வணிகம் ஆகும். மின் வணிகம் உலகப் பொருளாதார முறையில் புரட்சிகர மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது.
2. செயற்கை நுண்ணறிவு :
மனிதன் சிந்தித்துச் செயல்படுவது போன்று. பல்வேறு கணினிச் செய்நிரல்களை உருவாக்கி, அவற்றைக் கணினியில் உள்ளீடு செய்து, அதன் வழியாக ஒரு எந்திரத்தைச் சிந்தித்துச் செயல்பட வைக்கும் முறையினை செயற்கை நுண்ணறிவு என்று எளிமையாகச் சொல்லலாம். கேட்டல், பார்த்தல், சுவைத்தல், நுகர்தல், உணர்தல் எனும் ஐம்புலன்களைக் கொண்டு மனிதன் செய்யக்கூடிய பல்வேறு பணிகளை, மனிதன் உதவியின்றி ஒரு எந்திரமேச் செய்திடச் செயற்கை நுண்ணறிவு உதவுகிறது.
3. சைபர் பாதுகாப்பு :
இணைய பாதுகாப்பின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கிறது. சைபர் பாதுகாப்பு வல்லுநர்கள் அடுத்த சில ஆண்டுகளில் நிறைய வேலைவாய்ப்புகளையும், அதிக சம்பளத்தையும் எதிர்பார்க்கலாம். ஏனெனில் அதிக எண்ணிக்கையிலான சைபர் தாக்குதல்கள் திட்டமிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு, தகுதியான தொழிலாளர்கள் இல்லாததால் பாதுகாப்புக் குழுக்களிடமிருந்து எந்த எதிர்ப்பும் இல்லாமல் பரப்பப்படுகிறது.
4. மருத்துவம் சார்ந்த ஜெனாமிக்ஸ் :
மருத்துவத்துறை படிப்படியாக நவீனமயமாகிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் தொழிலும் அதிகமாகிவிட்டது. மருத்துவத்துறையைப் பொறுத்தவரை என்றைக்கும்நிலைத்தன்மை இருக்கும்.
5. ஆளில்லா விமான தொழில்நுட்பம் :
ஆளில்லா விமான தொழில்நுட்பம் இன்றைக்கு விவசாயம் உள்ளிட்ட முக்கிய பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, சரக்குகளை கையாளவும் பயன்படுத்தப்படுகிறது. எதிர்காலத்தில் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானங்களின் வளர்ச்சி அனைத்து துறைகளுக்கும் பயன்படும்.
6. ரோபோ:
ரோபோ தொழில்நுட்பம் வளர்ந்த நாடுகளில் மருத்துவம் உள்ளிட்ட பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. மனிதருக்கு நிகரான பணிகளைச் செய்யும் அளவுக்கு இன்றைக்கு ரோபோடிக் தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்துள்ளது.
7. மெய்நிகர் காட்சி : (VIRTUAL REALITY)
விர்ச்சுவல் ரியாலிட்டி என்றழைக்கப்படும் மெய்நிகர் காட்சி என்பது ஓர் உருவகப்படுத்தப்பட்ட அனுபவமாகும். இது நிஜ உலகத்தை ஒத்ததாகவோ அல்லது முற்றிலும் மாறுபட்டதாகவோ இருக்கலாம். பொழுது போக்கு, கல்வி, மருத்துவம், ராணுவம் மற்றும் வணிகம் போன்றவற்றில் நேரில் சந்திப்பது போன்ற உணர்வை மெய்நிகர் காட்சி ஏற்படுத்தும். எனவே இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
8. நானோ தொழில்நுட்பம் :
பெரிய அளவிலான பொருள்களையோ கருவிகளையோ செய்ய, துல்லியமாக அணு அளவிலும், மூலக்கூறு அளவிலும் பொருள்களைக் கையாண்டு செய்யும் முறையே நானோ தொழில்நுட்பம் அல்லது மீநுண் தொழில்நுட்பம் ஆகும்.
9. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி :
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் என்பது சூரிய ஒளி, காற்று, மழை, கடல் அலை, புவி வெப்பம் போன்ற புதுப்பிக்கத் தக்க இயற்கை வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் ஆகும்.
10. பகிர்வுச் சந்தை/நேரடி விற்பனை :
ஒரு நேரடி விற்பனை வணிகம் அதன் தயாரிப்புகளை நேரடியாக நுகர்வோருக்கு விற்கிறது. நிலையான சில்லறைக் கடைகள் போன்ற இடைத்தரகர்களின் தேவையை இது நீக்குகிறது.
11. இணைய வழி கற்றல் :
இ-லேனிங் எனப்படும் இணைய வழியிலான கற்றல் இன்றைக்கு உலகம் முழுவதும் பெருகி வருகிறது. எதிர்காலத்தில் இந்த துறைக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.
12 பெரிய தரவு : (DATA ANALYST)
தரவுகளைச் சேகரித்து வழங்கும் தொழில் இன்றைக்கு முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது. அதிக தரவுகள் வைத்திருக்கும் நிறுவனம் பல கோடி ரூபாயை சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
13. 3டி பிரிண்டிங் :
முப்பரிமாண பொருட்களை தத்ரூபமாக உருவாக்கும் தொழில்நுட்பம்.
14. பிளாக்செயின் தொழில்நுட்பம் :
பிளாக்செயின் தொழில்நுட்பம் என்பது ஒரு புதிய தரவு கட்டமைப்பாகும். இது பாதுகாப்பான, குறியாக்கவியல் அடிப்படையிலான மற்றும் தரவுத்தளங்களில் (சங்கிலிகள் என அழைக்கப்படும்) பரிவர்த்தனை பதிவுகளை விநியோகிக்கிறது.
இந்த 14 துறைகளில் இணைந்து பணியாற்றுபவர்கள் இந்த உலகத்தையே ஆளப் போகிறார்கள் என்று 'வேர்ல்டு எக்னாமிக் இதழ்' தெரிவித்துள்ளது.
இந்த 14 துறைகளில் இறங்கினால் அதிக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். இந்த துறைகளில் இறங்கும் அனைவரும் வெற்றி பெறுவார்களா என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும். அனுபவம், நிதிநிலையைப் பொறுத்தே இந்த துறைகளில் வளர்ச்சி பெற முடியும். ஆனால், இந்த பட்டியலில் உள்ள 14 தொழில்களும் பெரும் வளர்ச்சி பெறப்போகின்றன என்பது மட்டும் உண்மை.
இதில் 10 ஆவதாக இருக்கும் பகிர்வுச் சந்தை/ நேரடி விற்பனை இணையம் வழியே நடைபெறும். இந்த துறையில் மட்டும் அனுபவமோ, பெரிய முதலீடோ தேவையில்லை. இதில் யார் வேண்டுமானாலும் ஈடுபடலாம். பெரிய கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகும் 14 துறைகளில் இதுவும் ஒன்று. இந்தத் துறையால் தமிழகத்தின் சாதாரண ஏழையைக் கூட கோடீஸ்வரராக மாற்ற முடியும்.
வீட்டிலிருந்தாலும் சரி, மாணவர்களாக இருந்தாலும் சரி, வேலைக்குச் செல்வோராக இருந்தாலும் சரி, குடும்பத்தலைவிகளாக இருந்தாலும் சரி, இந்த துறை பெரிய அளவிலான எதிர்காலத்தை அளிக்கக் காத்திருக்கிறது என்பதே உண்மை.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம் https://meelpaarvai.blogspot.com/2024/06/ai.html
Comments
Post a Comment