மகப்பேறு அருளும் மாம்பழநாதர்
மகப்பேறு அருளும் மாங்கனித் திருவிழா
"ராணிப்பேட்டை மாவட்டத்துக்கு உள்பட்ட அரக்கோணம் அருகேயுள்ள தக்கோலத்தில் உள்ள ஏழு சிவாலயங்களில் ஒன்று அருள்மிகு மரகதவல்லி சமேத மாம்பழநாதர் கோயிலாகும்.
திருவூறல் என்ற இயற்பெயர் கொண்ட இந்த ஊரில் ஏழு ரிஷிகளும் ஏழு திசைகளில் கடவுளை நோக்கி அமர்ந்து தியானம் செய்த சிறப்பு பெற்றமையால் தவக்கோலம் என்ற பெயர் அமைந்தது. அது நாளடைவில் தக்கோலம் என்று மருவி தற்போது அதே பெயர் நடைமுறையில் உள்ளது.
இந்த தக்கோலம் ஊரில் ஏழு சிவாலயங்களும், ஏழு அம்மன் ஆலயங்களும், ஏழு விநாயகர் ஆலயங்களும் அமையப்பெற்ற ஒரு வித்தியாசமான ஊராகத் திகழ்கிறது. இங்கு வெளி மண்டபத்தில் உள்ள நந்தி சிலை சங்குடன் கூடிய மாலை அணிந்து இருப்பது விசேஷம். சப்த ரிஷிகளில் முதன்மையானவரான கௌதம மகரிஷிக்கு இங்கு தனிச்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. மூலவர் சன்னிதானத்துக்கு எதிரிலேயே சந்திர சூரியர்களுக்கும் தனி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கிறது.
தொண்டை நாட்டு தேவாரப்பாடல் பெற்ற தலம். பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட பெருமையுடையது. காரைக்கால் அம்மையாரும் திருவாலங்காடு செல்லும் முன் இங்கு வந்து வழிபட்டதாகத் தல வரலாறு உண்டு.
இந்த கோவில் மகாபாரத இதிகாசத்துடன் சம்பந்தப்பட்டிருக்கிறது. மகாபாரதத்தில் "நச்சுப் பொய்கையும் உண்மை கனி புகுதலும்" என்ற அத்தியாயத்தில் இந்தக் கோவிலின் வரலாறு முழுக்க சொல்லப்பட்டிருக்கிறது. அதனால் இந்த ஆலயத்தின் உள்ளே பஞ்சபாண்டவர்கள் திரௌபதியுடன் இருக்கும் சிலைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன இது வரலாற்று சிறப்புமிக்க ஒரு தனித்துவமான அமைப்பாகும்.
இந்த ஆலயத்தில் உள்ள மாமரத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரே ஒரு மாங்கனி மட்டுமே அந்த மரத்தில் உதிக்கும் அதிசயமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இவ்வளவு சிறப்பு வாய்ந்த மாம்பழநாதருக்கு தம்பதிகள் மகப்பேறு வேண்டி இறைவனுக்கு மாம்பழம் படைத்து வழிபாடு செய்தால் குழந்தைச் செல்வம் அருள்வார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக மக்களிடையே உள்ளது. ஜூன் 23-இல் மாங்கனித் திருவிழாவன்று பக்தர்களால் படைக்கப்படும் ஆயிரக்கணக்கான மாம்பழங்களால் இறைவ னுக்கு அர்ச்சனை, அலங்காரமும் செய்யப்ப டும்.
அமைவிடம் :
அரக்கோணம் கடம்பத்தூர் செல்லும் சாலையில் கிலோமீட்டர் தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது.
எட்டுத்திக்கும் மயானத்தின் மத்தியில் இருக்கும் பிரத்தியங்கரா தேவி https://meelpaarvai.blogspot.com/2024/06/blog-post_38.html
Comments
Post a Comment