நீங்கள் நீங்களாக இருங்கள்
THINK POSITIVE - PART 2 :
எனக்கு இந்த மந்திரம் தெரியாது.
அந்த மந்திரம் புரியாது. ஸ்லோகம் தெரியாது. தியானம் தெரியாது. பகவத்கீதை தெரியாது. திருவாசகம் தெரியாது. ஞான விளக்கம் புரியாது.
இந்த பல்லவி பலர் மனதில் உண்டு.
தாங்களும் எல்லாவற்றையும் உணர வேண்டும். ஆனால் முடியவில்லையே என்று ஆதங்கம்.
சித்தர்கள் பரிபாடல், ரகசியங்கள், மந்திரங்கள், யாகங்கள் என்று இன்னொரு கூட்டம் மிரட்டி கொண்டு இருக்கும்.
ஓஷோ, ஜென், லாவோட்ச, புத்தர்
என்று இன்னொரு track உண்டு.
உன்னால் அவன், அவனில் நீ என்ற அத்வைதம் தூரத்தில் முழங்கும்.
நான் கடைந்தேறுவது எப்படி? என்று வெகுளித்தனமாய் மிரளுபவர்கள் பலர்.
எல்லாவற்றையும் மறந்து விடுங்கள்.
இந்த மாயையிலிருந்து வெளியே வந்து விடுங்கள்.
நல்ல எண்ணங்களோடு, உங்கள் கடமைகளை சரிவர செய்யுங்கள்.
அன்பும் கருணையோடு இருங்கள்.
எளியோர்க்கு முடிந்த உதவி செய்யுங்கள்.
உங்களை சுற்றி ஒரு அன்பு வளையத்தை
இயல்பாக உருவாக்குங்கள்.
வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும்
ரசித்து உண்மையாக வாழுங்கள்.
உங்களை இந்த trackக்கு கொண்டு வரத்தான் இத்தனை மேளதாளங்கள்.
Be yourself. நீங்கள் நீங்களாக இருங்கள். எந்த imitationம் வேண்டாம்.
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்...
THINK POSITIVE ... ஆழ்மனதின் அற்புத சக்தி ... https://meelpaarvai.blogspot.com/2024/05/think-positive.html
Yes it's true... valuable words...
ReplyDelete