மகாராஜா திரைப்பட விமர்சனம்

 விஜய் சேதுபதியின் 50-வது படம்


MOVIE : MAHARAJA (U/A)

JONOUR : ACTION DRAMA

DIRECTOR : நிதிலன் ஸ்வாமிநாதன்

விஜய் சேதுபதி நடித்து நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள மகாராஜா படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்.

CASTING :

விஜய் சேதுபதியின் 50-வது படமாக உருவாகியிருக்கும் படம் மகாராஜா. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் ஸ்வாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். அனுராக் கஷ்யப் , மம்தா மோகன்தாஸ் , அபிராமி, நடராஜன், பாய்ஸ் மணிகண்டன் , பாரதிராஜா, முனீஷ்காந்த் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அஜ்னீஷ் லோக்நாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

திரைக்கதை : 

சலூன் கடை ஒன்றில் வேலை பார்க்கும் மகாராஜாவின் (விஜய் சேதுபதி) மனைவி விபத்தில் இறந்துவிடுகிறார். மகள் ஜோதி (சச்சனா) ஸ்போர்ட்ஸ் கேம்புக்காக வெளியூர் சென்றுவிட, தனிமையில் இருக்கிறார் மகாராஜா. வேலை முடித்து வீட்டுக்கு வந்த தன்னை தாக்கிவிட்டு, வீட்டிலிருந்து லக்‌ஷ்மியை சிலர் திருடிச் சென்றுவிட்டதாகவும், அதனை மீட்டு கொடுக்குமாறும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

தொடக்கத்தில் இந்தப் புகாரை உதாசினப்படுத்தும் காவல் துறை, ரூ.7 லட்சம் வரை காசு கொடுப்பதாக மகாராஜா சொன்னதும், லக்‌ஷ்மியை தேடிக் கண்டுபிடிக்கும் விசாரணையை தீவிரப்படுத்துகின்றனர். உண்மையில் யார் இந்த லக்‌ஷ்மி? மகராஜாவின் நோக்கம் என்ன? அவருக்கான பின்புல கதை என்ன? - இதுதான் படத்தின் திரைக்கதை.

விமர்சனம் :

குரங்கு பொம்மை’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிதிலன் சாமிநாதன் இயக்கியிருக்கும் இப்படம் ஒரு முடிச்சை தனக்கத்தே வைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டேயிருக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரை அந்த முடிச்சு என்ன என்ற கேள்வியும், ஆர்வத்தையும் பார்வையாளர்களிடையே தக்க வைத்து நகரும் திரைக்கதை சுவாரஸ்யமாகவே கடக்கிறது.

சீரியஸான ஒரு சப்ஜெக்ட்டை கொஞ்சம் புதிய முறையில் விறுவிறுப்பும் சுவாரஸ்யமும் கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர். NON-LENEAR பாணியில் காட்சிகளை முன்னுக்குப் பின்னாக அமைத்து திரைக்கதையில் விளையாடியிருக்கிறார். அதுவும் இடைவேளைக்குப் பிறகு படம் முடிச்சை அவிழ்க்கும் இடத்தை நோக்கி நகர்வதும், இறுதி 20 நிமிடமும் சுவாரஸ்யம்.

நடிப்பு : 

சோகத்தை சுமந்த முகத்துடன் சாமானிய சலூன் கடைக்காரரின் உணர்வுகளை அழுத்தமாக பதிய வைக்கிறார் விஜய் சேதுபதி. ஆக்‌ஷன் காட்சிகளிலும், ஆக்ரோஷத்தில் கத்தும் இடங்களிலும் கவனிக்க வைக்கிறார். 50 படங்களைக் கடந்த நடிப்பின் முதிர்ச்சி திரையில் தெரிகிறது. நிச்சயம் அவருக்கு பெயர் சொல்லும் படமாக அமையும் 

விஜய் சேதுபதி சலூன் கடை வைத்திருப்பது படத்தில் பெரிய பங்காக இருக்கும் என்று எதிர்பார்த்தால் அது எதுவும் இல்லை. ஒரு முக்கியமான கதை திருப்பத்திற்காக மட்டுமே அவர் முடி திருத்தும் ஒருவராக வடிவமைக்கப்பட்டிருக்கிறார். படத்தின் கதாபாத்திரங்களுக்கு இருக்கும் செண்டிமெண்ட் மாதிரி இயக்குநருக்கு பாரதிராஜா செண்டிமெண்ட்போல. அதான் இரண்டே காட்சிகளில் மட்டும் வரும் ஒரு கேரக்டரை அவருக்கு கொடுத்து வைத்திருக்கிறார்.

அனுராக் கஷ்யபின் நடிப்பு வில்லனாக நம்ப வைத்தாலும், இந்த கதாபாத்திரத்தை எந்த நடிகர் வேண்டுமானாலும் நடித்திருக்கலாம், பி.டி வாத்தியாராக சும்மா வரும் மம்தா மோகன்தாஸ் , சில காட்சிகளில் அபிராமி என முழுமைபெறாத குறைகள். நடராஜன் நடித்திருக்கும் போலீஸ் கதாபாத்திரம் ரசிகர்களை கவரும் தருணம் ஒரு நல்ல சர்ப்ரைஸாக இருக்கும்.

பின்னணி இசை :

ஒரே ஒரு பாடல் தான் என்றாலும் பின்னணி இசையில் படத்தை வேகத்தை இசையால் கூட்டுகிறார் அஜ்னீஷ் லோக்நாத். 

ஒரு சாதாரண திரை ரசிகனுக்கு மகாராஜா படம் நிச்சயமாக கொடுத்த காசுக்கு நேர்மையான படமாக நிச்சயம் இருக்கும். ஆனால் வலியை சொல்லும் கதையைப் பார்த்த உணர்வு இருக்குமா என்றால் அது இல்லைதான்.

பிளஸ் : விஜய் சேதுபதி நடிப்பு, திரைக்கதை, MAKING

மைனஸ் : நடிகர்கள் தேர்வு

FINAL கமண்ட் :

ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரு பரபரப்பான கமர்ஷியல் படம் பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் பார்க்கலாம்.

ஹரா- திரை விமர்சனம் ... https://meelpaarvai.blogspot.com/2024/06/blog-post_9.html



Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்