எட்டுத்திக்கும் மயானத்தின் மத்தியில் இருக்கும் பிரத்தியங்கரா தேவி
ஆலயம் தேடுவோம் எனும் இந்தத் தொடரில் சைவ ஆலயங்கள், வைணவ திருத்தலங்கள், சக்தி பீடங்கள், விநாயகப் பெருமான் மற்றும் முருகப்பெருமானின் திருத்தலங்கள் என்று பலதரப்பட்ட ஆலயங்களைப் பற்றிய வரலாறு, புராண செய்திகள், அமைவிடம் மற்றும் வழிபடும் முறைகள், ஆலயத்தின் சிறப்புகள் போன்ற பல தகவல்களைக் காண இருக்கிறோம். அன்பர்கள் தங்களுக்கு மானசீகமான ஈடுபாடு உள்ள தளங்களை தேர்ந்தெடுத்து தரிசிக்கலாம்.
தமிழ் கூறும் நல்லுலகில் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒவ்வொருவரும் படித்து பயன்பெற வேண்டும் என்பதே எமது விருப்பம்.
இன்றைய பகுதியில் நாம் காண இருப்பது அய்யாவாடி - பிரத்தியங்கரா தேவி.
4.அய்யாவாடி - பிரத்தியங்கரா தேவி.
மஹா ப்ரத்தியங்கரா தேவி
தலச்சிறப்பு :
பஞ்சபாண்டவர்கள் சரபேஸ்வரரின் மனைவியான இவ்வம்பிகையை, அஞ்ஞாத வாசம் (தலைமறைவு) இருந்த காலத்தில் சித்திரை, வைகாசி மாதங்களில், தாங்கள் இழந்த செல்வத்தைப் பெற அவர்கள் இங்கு வந்து ஐந்து விதமான இலைகளால் பூஜித்து வழிபட்டனர். அதனால் இத்தலத்திற்கு ஐவர்பாடி என்ற பெயர் ஏற்பட்டது. அதுவே தற்பொழுது அய்யாவாடி என்று அழைக்கப்படுகிறது.
திருத்தல அமைப்பு:
இத்தலத்தில் ப்ரத்தியங்கராதேவி சிம்மம் பூட்டிய ரதத்தில் அமர்ந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறாள். இத்திருத்தலத்தில் பிள்ளையார், சிவன் மற்றும் பிறசந்நிதிகளும் அமைந்துள்ளன.
இந்திரஜித் வழிபடுதல் :
இராவணனின் மகன் இந்திரஜித் என்ற மேகநாதன் நிகும்பல யாகம் இத்தலத்தில் செய்தான். மேலும் இந்திரஜித் மரணபயம், அகாலமிருத்யு, அபமிருத்யு, ஆகியவைகள் நிவர்த்தியாக இத்தேவியை வழிபட்டான்.
பலன்கள் :
ப்ரத்தியங்கரா தேவியை மனமுருகி வழிபட்டால் பில்லி, சூனியம், ரணம்,ரோகம், கடன், சத்ரு ஆகியவைகள் நீங்கி, 16 வகையான செல்வங்களையும் சிறப்பினையும் அளிப்பாள்.
சிறப்பு வழிபாடுகள் :
இத்தலத்தில் எழுந்தருளியுள்ள ப்ரத்தியங்கரா தேவிக்கு ஒவ்வொரு திங்களும் வரும் அமாவாசையன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை யாகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
தலவிருட்சம் :
இத்தலத்தில் ஆலமரம் ஐந்துவிதமான இலைகளைக்கொண்டு தலவிருட்சமாக அமைந்துள்ளது.
வழித்தடம் :
கும்பகோணத்திற்கு அருகில் திருநாகேஸ்வரத்திற்கு பக்கத்தில் அடர்ந்த காட்டினில் இத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணத்திலிருந்து அடிக்கடி பேருந்துகள் சென்று வருகின்றன.
3.பிரளயம் காத்தவிநாயகர் - திருப்புறம்பயம். https://meelpaarvai.blogspot.com/2024/05/3.html
Comments
Post a Comment