INDIA vs PAKISTAN... வரலாற்று சிறப்புமிக்க உலகக்கோப்பை மோதல்

பரபரப்பாக நடந்து கொண்டிருக்கும் T20 WORLD CUP தொடரின் முக்கியமான ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் நாளை பலப்பரிட்சை நடத்துகின்றன அந்த போட்டியை பற்றிய சிறப்புக் கண்ணோட்டம் தான் இந்த பதிவு.

India vs Pakistan :

ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா ஜூன் 9, ஞாயிற்றுக்கிழமை நியூயார்க்கில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ள உள்ளது.

ஜூன் 5 அன்று நியூயார்க்கின் நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடந்த டி20 உலகக் கோப்பை 2024ன் தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை வீழ்த்தி இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. 

இருப்பினும், ரோஹித் சர்மா&கோ அணிக்கு இப்போது ஒரு பெரிய சவால் காத்திருக்கிறது. ஜூன் 9 ஞாயிறு அன்று அதே மைதானத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொள்ளும். இதுவரை மைதானத்தின் PITCH வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாவே உள்ளது.

பாகிஸ்தான் அதன் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் மோசமான தோல்வியை சந்தித்த போதிலும், கூடுதல் முனைப்புடன் ஆடி இந்தியாவிற்கு நெருக்கடி தரக்கூடும். இந்த போட்டியில் அவர்கள் வென்றே ஆகவேண்டிய வாழ்வா சாவா? நிலை. தோல்வியடைந்தால் முதல் சுற்றுடன் வெளியேற வேண்டும்.

முகமது அமீர் , ஷாஹீன் அப்ரிடி , நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் போன்றவர்கள் ஆடுகளத்தில் இந்திய பேட்டர்களுக்கு கடினமாக்க ஆர்வமாக இருக்க வேண்டும்.

வரவிருக்கும் ஆபத்தை உணர்ந்து, கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி உட்பட இந்திய அணியின் பேட்டர்கள் சில சிறப்பு பயிற்சிகளுடன் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

இந்திய அணியின் பலமே அதன் பேட்டிங் வரிசைதான். ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், SKY, சிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல் என மிக நீண்ட பேட்டிங் படையை கொண்டுள்ளது.

ஜஸ்பிரித் பும்ரா , அர்ஷ்தீப் சிங் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரை கொண்ட வேகப்பந்து வீச்சு படையும் தயாராகவே உள்ளது. ஸ்பின்னர் தேவை எனில் சாஹல் அநேகமாக களம் இறக்கப்படலாம். அது அணியை மேலும் வலுப்படுத்தும்.

பாகிஸ்தான் அணி சிறப்பான அணியாக காணப்பட்டாலும் சமீபத்திய தோல்விகளால் அந்த அணி உற்சாகமின்றி காணப்படுகிறது அதனை இந்த போட்டியில் களைந்து, உத்வேகத்துடன் விளையாடினால் இந்தியாவிற்கு பெரும் சவாலை கொடுக்க முடியும். பேட்டிங்கை பொருத்தவரை முகமது ரிஸ்வான், பாபர் ஆஸம், பக்கர் ஜமான் போன்ற அதிரடி வீரர்களை கொண்டுள்ளது. பேட்டிங்க்கும் நான்கு வேகப்பந்து புயல்களும் கைகொடுக்கும் பட்சத்தில் பாகிஸ்தான் வெற்றி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.

உலக கிரிக்கெட் அரங்கில் கணிக்கவே முடியாத அணி எனில் அது பாகிஸ்தான் தான். கடந்த காலங்களில் திடீரென விஸ்வரூப வெற்றிகளை குவிக்கும் அணி.

எப்படியோ ரசிகர்களுக்கு இந்தப் போட்டி பெரும் அறுசுவை விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை. போட்டி முடிந்த பிறகு அதனைப் பற்றி விரிவாக அலசி ஆராய்வோம்.

ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் 2024 https://meelpaarvai.blogspot.com/2024/06/2024-icc-mens-t20-world-cup.html






 

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்