Whatsappன் புதிய AI அப்டேட்

Whatsapp Business பல புதிய அம்சங்களைப் பெற்று வெளியாக இருக்கிறது


Whatsapp Business பல புதிய அம்சங்களைப் பெற்று வெளியாக இருக்கிறது, இதில் பெரிய அம்சமாக செயற்கை நுண்ணறிவு (AI) அப்டேட்  உட்பட வணிகர்கள் தங்கள் தகவல்தொடர்புகளில் சிலவற்றை புத்திசாலித்தனமாக தானாகவே செயப்படும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.

சாவோ பாலோவில் நடந்த நிகழ்வின்போது வாட்ஸ்அப் பிசினஸிற்கான புதிய AI-இயங்கும் "CHAT BOT" மற்றும் META சரிபார்க்கப்பட்ட BADGE ஆகியவற்றை  வெளியிட்டுள்ளது. இந்த அம்சங்களைப் பெற்ற முதல் நாடாக  இந்தியாவும் உள்ளது. கூடுதலாக, நிறுவனம் வணிகக் கணக்குகளுக்கான அழைப்பு (VOICE CALL) செயல்பாட்டையும் சோதித்து வருகிறது.

வாட்ஸ்அப்பில் வணிகங்கள் நடைபெறும் மிகவும் பிரபலமான கேள்விகளுக்கு பதிலளிக்க AI ஐப் பயிற்றுவித்து வருகிறார்கள்,  தாங்கள் தேடும் பதில்களை விரைவாக கண்டறிய  உதவ முடியும். AI தொழில்நுட்பத்துடன் தகவல்தொடர்பு ஆட்டோமேஷனைப் புதுப்பித்து, வணிகங்களை மிக சுலபமாக மேற்கொள்ள உதவும்.

இந்த அம்சங்கள் தற்போது சோதனையில் வடிவில் உள்ளது. முதலில்  இந்தியா மற்றும் சிங்கப்பூரில் இதன் அப்டேட் வெளியிடப்படும். இவை தவிர, சமூக ஊடக நிறுவனமான வாட்ஸ்அப் பிசினஸ் கணக்கு வைத்திருப்பவர்களுக்கான அழைப்பு செயல்பாட்டையும் (WHATSAPP CALL) சோதித்து வருகிறது.

இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் குரல் வழியாகவே வணிகங்களை மேற்கொள்ள முடியும். வணிகர்கள் தங்கள் பிரச்சினைகளை விரைவாகத் தீர்க்கவும், சிக்கலான கோரிக்கைகளுக்கான உதவியைப் பெறவும் இது உதவும் என்று மெட்டா கூறுகிறது. இந்த அப்டேட் வெளியிடும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று WAHTSAPP நிறுவனம் சார்பில்  தெரிவித்திருக்கிறார்கள்.

Android 15... புதிய ஆப்ஷன்கள் தமிழில்  https://meelpaarvai.blogspot.com/2024/05/android-15.html

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்