முத்திரைகள்
முத்திரை என்பது நமது உடலின் பஞ்ச பூதங்களை சரி நிலையில் வைத்திருக்க சித்தர்கள் கூறிய முறை ஆகும். முத்திரைகளை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.
1. யோக முத்திரைகள்
2. தேக முத்திரைகள்
இந்த பிரபஞ்சம் நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு என பஞ்சபூதங்களையும் உள்ளடக்கியது. இதில் ஒரு அங்கமாக விளங்கும் நமது உடலும் பஞ்ச பூதங்களால் ஆனதே. எனவே நமது உடலில் இந்த ஐந்து பஞ்சபூதங்களையும் சரியாக இயக்க முத்திரைகள் பயன்படுகின்றன. இவை சரியாக இருந்தால் தான் நம் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும். இந்த பஞ்ச பூதங்களின் அளவுகளில் ஒன்று குறைந்தாலோ, அல்லது அதிகமானலோ, நோய்கள் நமது உடலை பாதிக்கின்றன.
உடல் பருமனை குறைக்க வேண்டுமா ?
உடல் எடைகுறைக்க நம் சமுதாயத்தில் நேரம் செலவழிக்க இயலாத நிலையில் நாம் இருக்கிறோம். வேலை பளு காரணமாக உடல் பருமனைக் குறைக்க உடற்பயிற்சி செய்ய கூட நேரம் செலவழிக்க முடியாத நிலையில் பெரும்பாலானோர் இருக்கிறோம். இதற்காக நாம் தினமும் 10 நிமிடம் ஒதுக்கினால் போதும். நிச்சயமாக மாதம் 3-5 கிலோ வரை உடல் எடை குறைக்க முடியும். உடல் பருமனை குறைத்து ஆரோக்கிய வாழ்வு வாழ ஒரு அருமையான முத்திரை தான் இந்த சூரிய முத்திரை.
சூரிய முத்திரை :
சூரிய முத்திரை செய்யும் முறை :
நம் கை விரல்களில் மோதிர விரலின் நுனியை கட்டை விரலின் அடியிலும் கட்டைவிரல் மோதிர விரலை தொட்டு கொண்டிருக்கும் படியும் செய்ய வேண்டும். இந்த முத்திரையை உட்கார்ந்த நிலையில் நம் பாதங்கள் தரையில் தொட்டு கொண்டிருக்கும்படி அமர்ந்து, கைகளை மடித்து மடியில் வைத்து தலை நேராக நோக்கிய நிலையில் செய்யவும்.
இந்த முத்திரை தினமும் காலையில் 10 நிமிடம் முநல் 20 நிமிடம் வரை செய்யலாம். மேலும் ஒரு நாளில் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எந்த இடத்திலும் செய்து கொள்ள முடியும் .
இந்த முத்திரை செய்வதால் நம் உடல் மிகவும் வெப்பமாகி தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இதனால் இந்த முத்திரை செய்து முடித்தவுடன் தண்ணீர் அதிகம் பருக வேண்டும். அதே சமயம் இந்த முத்திரையை அதிக நேரம் செய்தால் உடலில் வெப்பம் அதிகரிக்கும். எனவே குறிப்பிட்ட நேரம் மட்டுமே இந்த பயிற்சியை செய்யவும்.
நன்மைகள் :
1. உடல் எடை குறைக்க உதவும்.
2. கண் பார்வையை கூர்மையாக்க உதவுகிறது.
3. தைராய்டு சுரப்பி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த சூரிய முத்திரை பயன்படுகிறது.
4. உடலில் இரத்த ஒட்டம் சீராக பாயும்.
5. மன அழுத்தம் குறையும். பசியைத் தூண்டும்.
செய்முறை :
இரண்டு கைகளிலும் மோதிர விரலை மடக்கி கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து அதன் மேல் கட்டை விரலை வைத்து மெதுவாக அழுத்த வேண்டும்.
பயிற்சி நேரம் :
அதிகாலையில் கிழக்கு திசை நோக்கி பத்மாசனம் அல்லது சாதாரணமாக அமர்ந்த நிலையில் நிலையில் நேராக நிமிர்ந்து அமர்ந்து, கண்களை மூடி, இரு கைகளால் இந்த முத்திரையை செய்யவும். 10 முதல் 20 நிமிடங்கள் வரை செய்யலாம் செய்து முடித்தவுடன் தண்ணீர் பருக வேண்டும்.
முத்திரை பகுதி தொடரும் ...
Comments
Post a Comment