உலகில் பெரும்பான்மையான மக்கள் உபயோகிக்கும் ஆண்ட்ராய்டு மொபைல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விரைவில் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் தனது புதிய வெர்ஷனை வெளியிட உள்ளது.
வரும் ஓரிரண்டு மாதங்களில் இதன் புதிய பதிப்பான ஆண்ட்ராய்டு 15 வெளியாகிறது. இதற்க்கு வெண்ணிலா ஐஸ்கிரீம் என்று பெயரிட்டு இருக்கிறார்கள்.
இதில் இருக்கும் புதிய ஆப்ஷன்கள் வருமாறு :
1.NOTIFICATIONS :
பழைய ஆண்ட்ராய்டு வெர்சன்களில் நமது மொபைலுக்கு OTP நோட்டிபிகேஷன் வரும்போது பெரிய ஐகானாக காண்பிக்கும். அது நமக்கெல்லாம் பெரும் இடைஞ்சலாக இருந்தது. ஆனால் இனி அது போல் இருக்காமல் காம்பெக்ட் ஆக சிறிய நோட்டிபிகேஷன் ஆக OTPக்கள் காண்பிக்கப்படும். தேவைப்பட்டால் மட்டும் அதை ஸ்வைப் செய்து ஓபன் செய்து பார்த்துக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.
நாம் ஏதாவது முக்கியமாக ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது தான் நோட்டிபிகேஷன் ஆக வந்து குவிந்து நம்மை கடுப்பாக்கும்.
இந்த புதிய ஆண்ட்ராய்டு 15ல் ஒருவேளை நீங்கள் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டிருந்தாலும் கூட எந்த நோட்டிபிகேஷன் வந்தாலும் அது ஸ்கிரீன் ரெக்கார்டிங் வீடியோவை பாதிக்காது.
2.PRIVATE SPACE :
புதிய ஆண்ட்ராய்டில் பிரைவேட் ஸ்பேஸ் என்ற அற்புதமான ஒரு ஆப்ஷனை கொண்டு வந்திருக்கிறார்கள். அதாவது உங்கள் போனுக்குள்ளேயே இன்னொரு தனியான ஸ்பேஸ் இனி கிடைக்கும். இன்னொரு போன் போல, அல்லது இன்னொரு ஸ்டோரேஜ் போல எனக் கொள்ளலாம்.
இதற்குள் இருக்கும் போட்டோஸ் வீடியோஸ் எல்லாம் இதில் இருக்கும் ஆல்பத்தில் மட்டும்தான் காண்பிக்கும் படி அமைக்கப்பட்டிருக்கிறது.அப்படியே உங்கள் போனின் பிரைவேட் ஸ்பேசுக்கு நீங்கள் ஃபிங்கர்பிரிண்ட் லாக் வைத்துக் கொள்ளலாம், தனியாகப் பின்லாக், FACE UNLOCK போன்றவையும் வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்ல அது தனியாக பிளே ஸ்டோர், தனியாக இதற்கென்று ஆப்ஸ்களையும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.
இப்படி எல்லாமே தனி தனி தனியாக வைத்துக் கொள்ளலாம்
மற்ற ஓ எஸ் களில் கொடுக்கப்பட்டிருப்பதைப் போல பெயருக்கு கொடுக்காமல் முழுமையான பிரைவேட் ஸ்பேஸ் ஆக ஆண்ட்ராய்ட் கொண்டு வந்திருக்கிறது.
மொத்தத்தில் இந்த பிரைவேட் ஸ்பேஸ் என்ற ஆப்ஷன் ரொம்பவே பிரைவேட்டாக செயல்படுகிறது.
3. RECOMMENDED APPS :
ரெக்கமண்டட் என்று நாம் அடிக்கடி உபயோகிக்கும் ஆப்ஸ்கள் எல்லாம் நம் ஸ்கிரீன் ஓபன் செய்தாலே காண்பிக்கும். புதிய வெர்ஷனில் அவ்வாறு இல்லாமல் நாமே அதை கஷ்டம் செய்து எடிட் செய்து உபயோகப்படுத்தும் படி கொடுத்திருக்கிறார்கள்.
இன்றைய தேதியில் நமது போனில் எத்தனை ஆப்ஸ்கள் இருக்கிறது என்பது யாரும் கணக்கில் வைத்துக் கொள்வதில்லை. அது அனுமார் வால் போல நீண்டு கொண்டு தான் செல்லும். குப்பை போல் வைத்துக் கொண்டிருக்கும் பல ஆப்ஸ்கள் பேக்ரவுண்டில் ரன் ஆகி நமது நெட்டை காலி செய்வதோடு போனும் மெதுவாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இதை தடுக்க நீங்களே தேவையில்லாத சில ஆப்ஸ்களை ARCHIVE செய்து கொள்ளலாம், மற்றும் ஆட்டோமேட்டிக் ARCHIVE ஆப்ஸ் ஆன் செய்து வைத்தால் மொபைலே தேவையில்லாத ஆப்ஸ்களை ARCHIVE போல்டரில் சேமித்து வைத்துக் கொள்ளும்.
மீண்டும் தேவைப்படும் பொழுது நீங்கள் அதை டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். நீங்கள் அதில் சேமித்து வைத்திருக்கும் LOGIN ID மற்றும் போட்டோக்கள், வீடியோக்கள், படங்கள், மியூசிக் போன்றவை மீண்டும் இன்ஸ்டால் செய்யும்போது அவை ஆட்டோமேட்டிக்காகவே இன்ஸ்டால் ஆக்கிக் கொள்ளும்.
4.CIRCLE TO SEARCH :
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த, கூகுள் அனைத்து மீடியாக்களிலும் விளம்பரம் செய்த ஆப்ஷன் சர்கிள் டு சர்ச் (CIRCLE TO SEARCH) ஆப்ஷன் தான். அதை இதில் கொண்டு வந்திருக்கிறார்கள். நீங்கள் எது தேவையோ அதை மட்டும் CIRCLE செய்து பார்த்தால் அதற்குரிய டீடைல்ஸ் காண்பிக்கும்.
5. HAPTIC VIBRATION :
HAPTIC VIBRATION என்ற புதிய ஆப்ஷன் கொண்டுவரப்பட்டிருக்கிறது. நீங்கள் VOLUME UP அல்லது DOWN செய்யும் போதோ ஸ்க்ரீன் ஸ்வைப் செய்யும்போதோ வைப்ரேஷன் மினிமமாக நன்றாகவே செயல்படுகிறது. மேலும் போன் எங்கு வைக்கப்பட்டு இருக்கிறதோ அந்த இடங்களுக்கு ஏற்ப வித்தியாசமான பல VIBRATIONகள் செயல்படுகின்றன.
6. UI :
இதன் UI விஷயத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது. பார்க்க புதிய வடிவம் பெற்றதை போல உணர முடிகிறது. அதில் ஒரு ஆப்ஷனாக ஒருவேளை உங்களுக்கு யாரேனும் ஒரு ஸ்கேமர் கால் செய்தால் என்று வைத்துக் கொண்டால் ஸ்கேம் கால் என்று அலர்ட் வரும்படி செய்யப்பட்டிருக்கிறது.
இதில் புதிதாக வெப்கேம் பீச்சரும் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
உங்கள் பழைய போனையே WEBCAM ஆக உபயோகிக்கவும் முடிகிறது. மேலும் அதில் ஹை குவாலிட்டி வீடியோவில் பேசிக் கொள்ளலாம்.
இப்படி மேலும் பல சுவாரசியமான ஆப்ஷன்களுடன் விரைவில் வெளிவர இருக்கும் ஆண்ட்ராய்டு 15 (வெண்ணிலா ஐஸ்கிரீம்) மொபைல் OSஐ, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment