இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்
தியேட்டரிலும், OTT தளங்களிலும் பார்ப்பதற்கு நிறைய படங்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கின்றன.
1. ஸ்டார் (TAMIL)
OTT : PRIME VIDEO
கவின் நடிப்பில் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்ற படம் தான் ஸ்டார். ஸ்லோவாக செல்லும் ஒரு FEELGOOD மூவி தான் இது. வெளியான போது யூத் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற படம். ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.
2. BADE MIYAAN CHOTE MIYAAN (HINDI)
OTT : NETFLIXLANGUAGES : TAMIL DUB, Hindi, Telugu, Kannada, Malayalam.
RESULT : FLOP
அக்ஷய் குமார் டைகர்SHROFF ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் இந்தப் படத்தின் கதை சிறப்பாக இருந்தாலும் திரைக்கதை அவ்வளவு சுவாரசியமாக அமையவில்லை.
3. MAIDAAN (HINDI)
OTT : PRIME VIDEO
LANGUAGES : TAMIL DUB, Hindi, Telugu, Kannada, Malayalam.
RESULT : SUPER HIT
அஜய் தேவ்கனின் நடிப்பில் வெளியாகியிருக்கும் மைதான் படத்திற்கு தமிழ் டப்பிங் இருக்கு. கால்பந்து விளையாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம், படத்தின் கடைசி ஒரு மணி நேரம் மிகவும் பரபரப்பாக அருமையாக இருக்கும்.
4. THE LEGEND OF HANUMAN (HINDI) SEASON 4.
OTT : HOTSTAR
LANGUAGES : TAMIL DUB, Hindi, Telugu, Kannada, Malayalam.
RESULT : SUPER HIT
இந்தப் படம் ஒரு அனிமேஷன் மூவிதான். இதற்கு முன்பு வெளியான மூன்று சீசன்களும் அனிமேஷன் படங்கள்தான். குழந்தைகளுக்கெல்லாம் மிகவும் பிடித்த வண்ணம் உருவாக்கப்பட்டிருக்கும் தமிழ் டப்பிங் உடன் காணக் கிடைக்கிறது. டப்பிங் செய்த விதமும் அருமையாக இருக்கிறது.
4. VARSHANGALUKKU SHESHAM (MALAYALAM)
OTT : SONY LIVLANGUAGES : TAMIL DUB, Hindi, Telugu, Kannada, Malayalam.
RESULT : HIT
பிரணவ் மோகன்லால் நடிப்பில் உருவாகி இருக்கும் ஒரு பீல் குட் ட்ராமா. இரண்டு நண்பர்கள் வாழ்வில் அவர்களின் லட்சியங்களை அடைந்தார்களா என்பது தான் இந்த படத்தின் ஓன் லைன். ஓரளவுக்கு சுவாரசியமான படமாகவே வந்திருக்கிறது. தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடா ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் காணக் கிடைக்கிறது.
5. ஆபரேஷன் லைலா (TAMIL)
OTT : TENTKOTTA
LANGUAGE : TAMIL
ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் தமிழ் லோ பட்ஜெட் படம் தான் ஆபரேஷன் லைலா. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரில்லர் மூவி என்பதால் இந்த படங்களை பார்க்கும் விருப்பமுடைய நண்பர்கள் தாராளமாக ஒரு முறை பார்க்கலாம்.
5. பூமர் அங்கிள் (TAMIL)
OTT : TENTKOTTA
LANGUAGE : TAMIL
யோகி பாபு ஓவியா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் பூமர் அங்கிள் ஒரு ஹாரர் காமெடி மூவி. எதிர்பார்த்த அளவு படம் இல்லை என பார்த்தவர்கள் மனநிலையை கடுப்பேத்தி இருக்கும் படம் இது
இன்னொரு லோ பட்ஜெட் ஹாரர் மூவியாக தமிழில் வந்திருக்கும் படம் தான் சிறகன். இந்த படமும் ஒரு சுவாரசியமான அனுபவத்தை தராது என்றே தோன்றுகிறது.
தமிழில் இந்த வாரம் திரையரங்குகளில்அஞ்சாமை, இனி ஒரு காதல் செய்வோம், ஹரா, தண்டுபாளையம், வெப்பன், காழ் என்ற படங்களோடு மெகா ஹிட் படங்கள் ஆன இந்தியன், கஜினி ஆகிய படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
தியேட்டரிலும் OTT தளங்களிலும் பார்ப்பதற்கு நிறைய படங்கள் இந்த வாரம் வெளிவந்திருக்கின்றன. ரசிகர்கள் படங்களைப் பார்த்து எந்த படம் நன்றாக இருக்கிறது என்பதை கமெண்டில் தெரிவிக்கவும்.
.
Comments
Post a Comment