தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்
ZEE 5 தளத்தில் தமிழில் ஒரு பொலிட்டிக்கல் டிராமா வெப்சீரிஸாக வெளியாகி இருக்கும் "தலைமை செயலகம்" விமர்சனம் இதோ...
கதை :
மேற்கு வங்கத்தில் ஒரு இளம் பெண்ணை பலர் சித்ரவதை செய்து வரும் நிலையில், ஒரு கட்டத்தில் அந்த பெண் வெகுண்டு எழுந்து அனைவரையும் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்று விடுகிறாள்.
அதன் பின்னர் அந்த பெண் என்ன ஆனார் என்பதை காட்டாமல், அங்கிருந்து கட் செய்தால் 15 ஆண்டுகள் கழித்து தமிழக அரசியல் களத்தில் முதல்வராக இருக்கும் கிஷோர் ஊழல் குற்றச்சாட்டுக்கு காரணமாக அவரது பதவி பறிபோகும் சூழல் உருவாகிறது. தனக்கு பிறகு ஆட்சியில் யாரை அரசியல் வாரிசாக அமர்த்தலாம் என்கிற சிந்தனையில் ஆடுகளம் கிஷோர் உள்ள நிலையில், 15 ஆண்டுகளுக்கு முன்பாக மேற்கு வங்கத்தில் பலரை வெட்டி சாய்த்து விட்டு தப்பித்த பெண் என்ன ஆனார் என்கிற விசாரணையை சிபிசிஐடி நடத்தி வருகிறது. இரண்டு கதைகளும் ஒரு புள்ளியில் சந்திக்கும் விதமாக இந்த கதையை அருமையாக எழுதி இயக்கி உள்ளார் வசந்தபாலன்.
எழுத்து இயக்கம் :
இந்த தொடரை வசந்தபாலனும், எழுத்தாளர் ஜெயமோகனும் இணைந்து எழுதி இருக்கிறார்கள். வசந்தபாலன் இயக்கி இருக்கிறார். இதன் பலமே இதன் ரைட்டிங் தான். கதை, திரைக்கதை,கதாபாத்திரங்களின் வடிவமைப்பு மற்றும் நடிகர்கள் தேர்வு ஆகியவை இந்த தொடரை மேலும் சுவாரசியமாக்குகின்றன.
திரைக்கதை :
முதலமைச்சராக வரக்கூடிய கிஷோர் மற்றும் அவரின் நிழலாக பின் தொடரும் ஸ்ரேயா ரெட்டி கிஷோரின் மகளாக நடித்திருக்கும் ரம்யா நம்பீசன் மருமகனாக வரும் நிரூப் நந்தகுமார் மற்றும் பரத், ஆதித்யா மேனன் ஆகியோரின் மிகச் சிறப்பான நடிப்பாற்றல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்துகின்றன.
50 வருட பாரம்பரியம் கொண்ட ஒரு கட்சியின் தலைவனாகவும் இப்போது முதலமைச்சர் ஆகவும் இருக்கும், ஊழல் குற்றச்சாட்டு காரணமாக பதவியை விட்டு இறங்க வேண்டும் என்கிற நிலைமையில் அந்தப் பதவியை காப்பாற்றிக்கொள்ள எந்த எல்லை வரையும் செல்ல தயாராக இருக்கும் கிஷோர், இவரை பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக என்ன சூழ்ச்சி வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கும் அரசியல் துரோகிகள் ஒருபுறம் என்று சமகால அரசியல் நிகழ்வுகளை மிகவும் நேர்த்தியாகவும், மிகைப்படுத்தாமலும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது வசந்த பாலனின் டீம்.
ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருக்கக்கூடிய ஒருவரை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசிடம் அரசியல் துரோகிகள் செய்யும் சூழ்ச்சிகள் என்று மிகவும் நுட்பமான மற்றும் ஆழமான அரசியலை மிகச் சிறப்பாக படம் ஆக்கி இருக்கிறார்கள்.
வசனம் :
பல இடங்களில் நறுக்கென்று இருக்கும் வசனங்கள் இந்த வெப் சீரிஸுக்கு மிகவும் பக்கபலம்.
Comments
Post a Comment