டி20 உலகக் கோப்பை


இன்று தொடங்குகிறது டி20 உலகக் கோப்பை

டல்லாஸ், ஜூன் 1:

ICC T20 உலகக் கோப்பை போட்டிகள் 2024

அமெரிக்கா-கனடா அணிகள் மோதும் முதல் ஆட்டத்துடன் ஞாயிற்றுக்கிழமை டல்லாஸ் நகரில் இன்று தொடங்குகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஒருநாள் உலகக் கோப்பை போட்டிகள் இருந்தாலும், T20 உலகக் கோப்பை போட்டிக்கு அதிக ஈர்ப்பு உள்ளது.

T20 ஆட்டங்களுக்கு ஏராளமான பார்வையாளர் கள் உள்ள நிலையில், 20 அணிகள் பங்கேற்கும் 9-ஆவது T20 உலகக் கோப்பை அமெரிக்கா-மே.இந்திய தீவுகளில் நடைபெறுகிறது.

20 அணிகள் பங்கேற்பு:

அமெரிக்காவின் டெக்ஸாஸ், ஃபுளோரிடா, நியூயார்க் நகரங்களிலும், மே.இந்திய தீவுகளிலும் உலகக்கோப்பை ஆட்டங்கள் நடக்கின்றன.
முதன்முறையாக 20 அணிகள் இடம் பெற்றுள்ள நிலையில் தலா 5 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும்.

முதன்முறையாக அமெரிக்காவில் ஐசிசி சர்வதேச போட்டி நடைபெறுகிறது. பெரும்பாலான ஆட்டங்கள் மே.இந்திய தீவுகளில் நடைபெறும் நிலையில், 16 குரூப் ஆட்டங்கள் அமெரிக்கா வில் நடைபெறும்.

இந்தியா-பாக். மோதல்: 

அனைத்து தரப்பினரும் ஆவ லுடன் எதிர்நோக்கியுள்ள இந்திய-பாக். ஆட்டம் ஜூன் 9-ஆம் தேதி நியூயார்க் லாங் ஐலண்ட் மைதானத்தில் (34,000 பார்வையாளர் கள் நடைபெறுகிறது.

சூப்பர் 8 சுற்று, அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் மே.இந்திய தீவுகளில் நடைபெறுகின்றன. இறுதி ஆட்டம் பார்படோஸ் கென்சிங்டன் ஓவலில் நடைபெறுகிறது.

வரும் 2028 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக்கில் T20 கிரிக்கெட்டை சேர்ப்பதற்கான முன்னோட்டமாக இந்த உலகக் கோப்பையை ICC கருதுகிறது. ஏராளமான புதிய நாடுகள்  ICC உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு T20 அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

புதிய அணிகள் சேர்ப்பு:

அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் உள்பட மொத்தம் 12 நாடுகள் டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ளன. நிகழ் டி 20 உலகக் கோப்பையில் கனடா, அமெரிக்கா, உகாண்டா புதிய அணிகளாக இடம் பெறுகின்றன. நேபாளம், பப்புவா நியூ கினியா, ஓமன் உள்ளிட்டவையும் புதியவையாகும்.

2007 சாம்பியன் இந்திய அணி அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்களுடன் கலந்து கொள்கிறது.
முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவில் மூத்த வீரர் ஸ்டீவ் ஸ்மித் இல்லை. டேவிட் வார்னர், மிட்செல் ஸ்டார்க், பேட் கம் மின்ஸ் ஆகியோர் உள்ளது பலமாகும்.

நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, முன்னாள் சாம்பியன்கள்
மே.இந்திய தீவுகள், பாகிஸ்தான், பலமான அணிகளான நியூஸி
லாந்து, தென்னாப்பிரிக்காவும் கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளன.


Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்