ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம்
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம் வரும் காலங்களில் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) தொழில்நுட்பம் வரும் காலங்களில் வேலைவாய்ப்பு சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளது என்று McKinsey அறிக்கை தெரிவிக்கிறது. மெக்கின்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் 2030ஆம் ஆண்டுக்குள், சுமார் 12 மில்லியன் வேலைவாய்ப்புகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட வேலைவாய்ப்பு இழப்புகளுக்கு இணையானது என்று கூறப்படுகிறது.
மெக்கின்சி நிறுவனத்தின் மூத்த பங்குதாரரும், அதன் குளோபல் இன்ஸ்டிட்யூட்டின் இயக்குநருமான க்வீலின் எல்லிங்ரூட் (Kweilin Ellingrud), நிறுவனத்துடன் இணைந்து இந்த McKinsey அறிக்கையை உருவாக்கியுள்ளார். அதன்படி 2030ஆம் ஆண்டுக்குள், சில துறைகளில் பணியாளர்களின் தேவை குறையும் என்றும், இதனால் சுமார் 11.8 மில்லியன் தொழிலாளர்கள் புதிய வேலைகளுக்கு மாற வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகள் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான அறிக்கையின்படி, சில துறைகள் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் வளர்ச்சியால் அதிகம் பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை எந்தெந்த துறைகள் என்பதைப் பார்ப்போம். அலுவலக உதவியாளர் பணிகள்: டேட்டாக்களைச் சேகரித்தல், அறிக்கைகளைத் தயாரித்தல் போன்ற பணிகளை AI தொழில்நுட்ப வளர்ச்சியைக் கொண்டு திறம்பட செயல்படுத்த முடியும். இதன் காரணமாக, இதுபோன்ற அலுவலக உதவியாளர் பணிகளில் வேலைவாய்ப்புகள் குறையக்கூடும்.
வாடிக்கையாளர் சேவை:
வாடிக்கையாளர்களை கையாள்வதில் AI தொழில்நுட்பம் சிறந்து விளங்குகிறது. எதிர்காலத்தில், வாடிக்கையர் சேவை மையங்களில் AI பெரிதும் பயன்படுத்தப்படலாம்.
உணவு சேவை:
உணவகங்களில் ஆர்டர் எடுப்பது, பில் தயாரித்தல் போன்ற பணிகளையும் AI கையாளக்கூடும். இதனால், இந்தத் துறையில் வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இன்னும் சில நாடுகளில் தற்போது AI ரோபோட்கள் தான் ஆர்டர் எடுக்க பயன்படுத்தப்படுகிறது.
உற்பத்தித் துறை:
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) இயந்திரங்களைக் கட்டுப்படுத்தி, உற்பத்தி செயல்பாடுகளை மேம்படுத்தப் பயன்படுத்தப்படலாம். இதன் காரணமாக, இந்த துறையில் எளிய மற்றும் மீண்டும் மீண்டும் செய்யும் பணிகளில் வேலைவாய்ப்புகள் குறையக்கூடும். இதுபோன்ற மாற்றங்கள் சில துறைகளில் இருந்தாலும், சில துறைகளில் AI வருகை புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்றும் அறிக்கை தெரிவிக்கிறது. உதாரணமாக, AI தொழில்நுட்பத்தை உருவாக்குதல், பராமரித்தல் போன்ற துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகலாம்.
மொத்தத்தில், AI தொழில்நுட்பம் வேலைவாய்ப்பு சந்தையை மாற்றியமைக்கும் என்றும், அதற்கேற்ப திறன்களை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றும் இந்த அறிக்கை வலியுறுத்துகிறது.
Comments
Post a Comment