உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகும் ஓசூர்

ஓசூர்

உலகின் மிகப்பெரிய உற்பத்தி மையமாகும் ஓசூர்!



டாடா எலெக்ட்ரானிக்சின் ஐபோன் அசெம்பிளி ஆலை விரிவாக்கம்!
த மிழ்நாட்டின் இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சென்னைக்கு மட்டுமின்றி வேறு பல மாவட்டங்களுக்கும் முக்கியமான பல முக்கியமான அறிவிப்புகள் வெளி யிடப்பட்டன.

அதன்படி விருதுநகர், வேலூர், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் புதிய சிப்காட் தொழில்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 22,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக ஓசூரில் முதலீடுகள் குவிந்து வருகின்றன.

இதன்படி டாடா மற்றும் ஓலா நிறுவனங்கள் தங்களது ஆலைகளை அமைக்கவும், விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டு வருகின்றன. உதாரணமாக ஓசூரில் உள்ள புதிய தளத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் தனது ஐபோன் அசெம்ப்ளி யூனிட்டை மேலும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.இந்த ஆலையில் ஏற்கனவே திட்டமிட்ட விரிவாக்கத் திட்டப்படி சுமார் 2 லட்சம் ஐபோன் களை தயாரிக்க உள்ளது. மிகப்பெரிய எலக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர் டாடா உருவாக்குகிறது. உலகிலேயே பெரிய ஐபோன் தொழிற்சாலைகளில் ஒன்றாக இது இருக்கும் என்கிறார்கள்.



டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது. இதேபோல் இந்தியாவின் மிகப்பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையையும் ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. இதில் கிட் டத்தட்ட 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

டாடா எலெக்ட்ரானிக்ஸ், தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சசரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை அதிக அளவில் விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்தில்தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா எலக்ட்ரானிக்ஸ் ஒசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவு படுத்தும் ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த தீவிரமாக முயன்றது. அதற்கான சூழ்நிலை இப்போதுதான் உருவாகி உள்ளது.

இதேபோல் தமிழ்நாட்டில் மின்சார பேட்டரி வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதற்காக ஓசூரில் கோடிக்கணக்கில் முதலீடு செய்யப்பட்டது. தமிழ்நாடு அரசுக்கும், ஓலா நிறுவனத்திற்கும் இடையே 7614 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு நான்கு சக்கர மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்ய ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.
மேலும் 20 மெகாவாட் மின்கலன்கள் உற்பத்தி திறன்கொண்ட ஆலைகளை அமைக்கவும் ஓலா நிறுவனம் முடிவு செய்துள்ளது.

இந்த சிப்களை உற்பத்தி செய்யும் உலகிலேயே பெரிய ஆலையாக இருக்கும் என்று ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆலைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் உள்ள சிப்காட் பூங்காவில் அமைக்கப்படும் என்ற ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம் 3,111 நபர்களுக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய இருசக்கர மின்சார வாகன உற்பத்தி மையமாக, 500 ஏக்கர் பரப்பளவில் இந்த உற்பத்தி ஆலை அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments

Popular posts from this blog

உடல் பருமனா? இனி கவலை வேண்டாம்... இதோ சூப்பர் டிப்ஸ்

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்

ஆரோக்ய வாழ்வுக்கு யோகாசனம் அவசியம்