துணியை இஸ்திரி போட போறீங்களா... இத படிங்க முதல்ல !!!

நம் துணிகளை தேய்ப்பதற்கு பின்னால்
இவ்ளோ பெரிய விஷயங்கள் இருக்கா ?


சுருக்கம் நிறைந்த ஆடைகளை அணிவது பார்ப்பவர்களுக்கு வேண்டுமென்றால் கொஞ்சம் அசிங்கமாகத் தெரியலாம். ஆனால், இந்த உலகின் நன்மைக்கும் உலகம் சூடாவதைத் தவிர்க்கவும் சுருக்கம் மிகவும் நல்லது.


மின்சாரத்தை சேமிக்கவும், கரியமில வாயு அதிக அளவில் வெளியேறுவதை கட்டுப்படுத்தவும் வெளியேறி உலக வெப்பமயம் ஆதலை தடுக்கவும் இனிமேல் நாம் வாரம் ஒருநாள் அயர்ன் செய்யாத உடைகளை அணிந்து ஆபீசுக்கு வருவது என்று  விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர். உடைகளை அயர்ன் செய்ய அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. அதை தவிர்க்க சுருங்கிய ஆடைகளை அணிய வேண்டுகிறோம், என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஏனெனில்  ஒவ்வொரு முறையும் நாம் உடைகளை அயர்ன் செய்யும்போது
குறிப்பிட்ட அளவில் கரியமில வாயு வெளியேறுகிறது.
இதனால் புவி
வெப்பமயமாகிறது.

சுருக்கம் நிறைந்த ஆடைகளை
அணிவது பார்ப்பவர்களுக்கு
வேண்டுமென்றால் கொஞ்சம்
அசிங்கமாகத் தெரியலாம்.
ஆனால், இந்த உலகின்
நன்மைக்கும் உலகம்
சூடாவதைத் தவிர்க்கவும்
சுருக்கம் மிகவும் நல்லது.
அதனால் அயர்ன் செய்யாத
உடைகளை அணிந்து இந்த
உல கில் ஏற்பட்டுள்ள
சுருக்கத்தை சரிசெய்வோம்..."
என்கிறார்.

அயர்ன் செய்யாத உடைகளை அணிவதுடன் தங்கள் அலுவலகத்தில் ஒவ்வொரு மாத மும் 10 சதவீத அளவுக்கு மின்சாரத்தை சேமிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளார்கள்.

எல்லாம் அறிந்த விஞ்ஞானிகளே அயர்ன் பண்ண வேணாம்னு சொல்லிட்டாங்க. இந்த உலகத்துக்காக நாமளும் அதை முயற்சி செஞ்சுதான் பார்ப்போமே என களத்தில் இறங்குவதா?

அல்லது நம் அழகு நம் உரிமை என அலட்சியமாக இருப்பதா..?
ஒண்ணும் புரியலையே என மக்கள் நொந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் ஒன்று. நம் உடல் உறுப்பைப் போல் நம்முடன் இரண்டறக் கலந்துவிட்ட இன்னும் எத்தனை விஷயங்கள் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக இருக்கிறதாக விஞ்ஞானிகள் கருதுவார்களோ தெரியவில்லை 

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்