நாராயணவனம்
ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான ஒரு கோவில், 100 திருப்பதிக்கு சமமான ஒரு கோவில் ரெண்டும் எங்க இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?
பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் ஜரு கண்டி,
ஜருகண்டி என்ற வார்த்தைகளின்றி நிம்மதியாக தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா?
100 திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி,
ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் ஆயிரம் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள்
தலத்திற்கும் தான்
இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்!
சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது
அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம்.
தல சிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம்.
இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர்.
திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி
நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும்.
இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம்.
நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில்.
இரண்டாவதுதான் திருப்பதி!
இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு.
ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது.
இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது.
தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,அருமையான
ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல்
தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர்.
வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது. இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது.
நாராயண வனம் எங்கு இருக்கிறது?
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது.
திருச்சானூரிலிருந்து
31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது.
கோயில் திறந்திருக்கும் நேரம்:
காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும்.
இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம்.
இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம்.
இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும்.
இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் .
இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் .
இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது .சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் .
இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது .
திறந்திருக்கும் நேரம் :
காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00
செல்லும் வழி:
இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது .சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது . சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது .
Comments
Post a Comment