100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா?



100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? மின் வாரியம் விளக்கம்

தமிழகத்தில் வீடுகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவசம் மின்சாரம் ரத்து என்ற பரப்பப்படும் தகவல் உண்மை நிலைக்கு மாறானது என்று மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் மே 19 அன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது...

தமிழகத்தில் வீடுகளுக்கு 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஒரே வீட்டு உரிமையாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டிருந்தால் அந்த வீடுகளுக்கு 100 யூனிட் இலவசம் வழங்கப்படாது, வர்த்தக கட்டணம் வசூலிக்கப்படும் என்று சில சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இந்தத் தகவலை மின்வாரியம் மறுத்துள்ளது.

தமிழ்நாடு மின்பகிர்மான கழகத்தில் வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படவில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளுக்கு எதிராக மின் இணைப்பு பெற்று பயன்படுத்தி வரும் மின்இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து ஒருங்கிணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

இதேபோல, வீட்டு பயன்பாட்டுக்கென மின் இணைப்பு பெற்று அதை ஆணையத்தின் விதிகளுக்கு எதிராக பொது பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்படும் மின் இணைப்புகளை மட்டுமே கண்டறிந்து உரிய மின்கட்டண வீத மாற்றத்துக்கு உள்படுத்தப்படும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

எனவே, ஆணைய விதிமுறைகளுக்கு எதிராக பயன்பாட்டில் உள்ள மின் இணைப்புளால் மின்வாரியத்துக்கு ஏற்படும் இழப்பை தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சியால் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்வது குறித்து பொதுமக்கள் மற்றும் வீட்டு மின் உபயோகிப்பாளர்கள் அச்சமடையத்தேவையில்லை.

வீட்டு பயன்பாட்டுக்கான மின் இணைப்பு தற்போது வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படமாட் டாது. அது தொடர்ந்து வழங்கப்படும். எனவே சமூக வலைதளங்கள் மற்றும் காட்சி ஊடகங்களில் வெளிவரும் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து என்பது குறித்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அது உண்மை நிலைக்கு மாறானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

மணக்குள விநாயகர்

T20 World Cup 2024

தலைமை செயலகம் WEB SERIES விமர்சனம்