14 இடங்களில் வெயில் சதம்
14 இடங்களில் வெயில் சதம் :
தமிழகத்தில் புதன்கிழமை 14 இடங்களில் வெப்ப நிலை 100 டிகிரி ஃ பாரன்ஹீட் கடந்து பதிவானது. அதிகபட்ச மாக சென்னை மீனம்பாக்கத்தில் 106.88 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.
இதேபோல, நுங்கம்பாக்கம் (சென்னை) - 104.72, திருத்தணி - 104.18, மதுரை விமான நிலையம் -104, பரங்கிப்பேட்டை - 103.28, மதுரை நகரம் -102.92, புதுச்சேரி - 102.56, ஈரோடு -101.84, வேலூர்- 101.48, நாகப்பட்டினம், கடலூர் (தலா) 101.12, திருச்சி -100.58, தஞ்சாவூர், தூத்துக்குடி (தலா) - 100.4 டிகிரி வரை வெப்பம் பதிவானது.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வியாழக்கி ழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மே 30, 31-ஆகிய தேதிக ளில் அதிகபட்ச வெப்பநிலை 105 டிகிரி ஃபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்சம் 87.8 டிகிரி வரையும் இருக்கும்.
வெயில் குறையும்:
வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை
வரை (மே 31- ஜூன் 2) தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் படிப் படியாக குறையும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment