ராசி- பலன்கள் 28.05.2024
இன்றைய ராசி பலன்கள்
꧁. 🌈 வைகாசி: 𝟭𝟱 🇮🇳꧂
🌼 செவ்வாய்-கிழமை 🦜
📆 𝟮𝟖 • 𝟬𝟱 • 𝟮𝟬𝟮𝟰 🦚
🔎 ராசி- பலன்கள் 🔍
╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝
🔯 மேஷம் -ராசி: 🐐🐐
குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். நீண்ட தூர பயணம் செய்வதில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் அமையும். கல்வியில் மேன்மை ஏற்படும். ஆக்கபூர்வமான நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐அஸ்வினி : ஆதரவான நாள்.
⭐பரணி : ஆர்வம் ஏற்படும்.
⭐கிருத்திகை : மேன்மையான நாள்.
◄•━━━━━━━━━━━━━━•►
✡ ரிஷபம் ராசி: 🐂 🐂
எதிர்பார்த்திருந்த உதவிகள் சாதகமாக அமையும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆன்மிகப் பெரியோர்களின் சந்திப்பு ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் நட்புக்களால் உற்சாகம் ஏற்படும். பணி சார்ந்த பழைய பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.
⭐கிருத்திகை : உதவிகள் சாதகமாகும்.
⭐ரோகிணி : சந்திப்பு ஏற்படும்.
⭐மிருகசீரிஷம் : பிரச்சனைகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மிதுனம் -ராசி: 👫👫
எதிலும் அவசரப்பட்டு செயல்படுவதை தவிர்க்கவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. வெளி வட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமையுடன் செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
⭐மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
⭐திருவாதிரை : வரவுகள் தாமதமாகும்.
⭐புனர்பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கடகம் -ராசி: 🦀 🦀
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொதுப்பணியில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த ஆசைகள் கைகூடுவதற்கான சூழல் ஏற்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். பாசம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
⭐பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
⭐ஆயில்யம் : ஆதாயம் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 சிம்மம் -ராசி: 🦁🦁
கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் உண்டாகும். நெருக்கடியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களில் ஆர்வம் ஏற்படும். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். வெளியூர் பயண வாய்ப்புகளின் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோகப் பணிகளில் மேன்மை ஏற்படும். பூர்வீக பிரச்சனைகள் குறையும். உதவி கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.
⭐மகம் : முன்னேற்றம் உண்டாகும்.
⭐பூரம் : ஆர்வம் ஏற்படும்.
⭐உத்திரம் : பிரச்சனைகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கன்னி -ராசி: 🧛♀ 🧛♀
நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். போட்டி பந்தயங்களில் கவனத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். கலை பணிகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
⭐உத்திரம் : பிரார்த்தனைகள் நிறைவேறும்.
⭐அஸ்தம் : நுட்பங்களை அறிவீர்கள்.
⭐சித்திரை : அனுபவம் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 துலாம் -ராசி: ⚖ ⚖
பெரியோர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். வெளியூர் சார்ந்த பயணங்களால் அனுபவம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். வீடு, வாகனங்களை சீர் செய்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சினம் மேம்படும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐சித்திரை : மாற்றம் பிறக்கும்.
⭐சுவாதி : சாதகமான நாள்.
⭐விசாகம் : ஆதரவான நாள்.
◄•━━━━━━━━━━━━━━•►
ஜோதிட சாஸ்திரம், [5/28/2024 7:12 AM]
🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂
கடன்களை அடைப்பதற்கான ஆலோசனை கிடைக்கும். திட்டமிட்ட காரியங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சொத்து விற்பது, வாங்குவதில் லாபகரமான சூழல் அமையும். புதிய மின்சார பொருட்களை வாங்குவீர்கள். பணி நிமித்தமான உதவிகள் கிடைக்கும். மறதி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.
⭐விசாகம் : ஆலோசனை கிடைக்கும்.
⭐அனுஷம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
⭐கேட்டை : உதவிகள் கிடைக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 தனுசு -ராசி: 🏹 🏹
தொழில் கூட்டாளிகள் ஆதரவாக செயல்படுவார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான சில வரவுகளின் மூலம் மனதில் குழப்பமான சூழல் அமையும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செய்லபடவும். ஆர்வம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வட மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : செந்நிறம்.
⭐மூலம் : ஆதரவான நாள்.
⭐பூராடம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐உத்திராடம் : சிந்தித்துச் செய்லபடவும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மகரம் -ராசி: 🐴🐴
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் அமையும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். துணைவர் இடத்தில் பொறுமை வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். ஓய்வு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.
⭐திருவோணம் : ஒப்பந்தங்கள் கைகூடும்.
⭐அவிட்டம் : அலைச்சல் மேம்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 கும்பம் -ராசி. ⚱⚱
எதிர்பாராத வரவுகள் உண்டாகும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். அனாவசிய செலவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்களில் விவேகம் வேண்டும். பணி நிமிர்த்தமான விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். பக்தி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.
⭐அவிட்டம் : வரவுகள் உண்டாகும்.
⭐சதயம் : செலவுகளை தவிர்க்கவும்.
⭐பூரட்டாதி : விவேகம் வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►
🔯 மீனம் -ராசி: 🐠 🐠
வெளி வட்டாரத்தில் மதிப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். அனுபவமிக்க வேலையாட்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேம்படும். பணி சார்ந்த சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். பாராட்டு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.
⭐பூரட்டாதி : மதிப்பு ஏற்படும்.
⭐உத்திரட்டாதி : கவலைகள் குறையும்.
⭐ரேவதி : நுணுக்கங்களை அறிவீர்கள்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈
Comments
Post a Comment